திருவாடானை மருத்துவமனையில் இப்படியும் ஒரு பிரச்னை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
திருவாடானை மருத்துவமனையில் இப்படியும் ஒரு பிரச்னை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:00

திருவாடானை-திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோனை கட்டடம் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் சாலையை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைக்கும் போது பிரேத பரிசோதனை அறைக்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைக்கபட்டது. இதனால் உடல்களை பரிசோதனை செய்து முடித்தவுடன் கைகளை சுத்தம் செய்யமுடியாமல் டாக்டர்கள், துாய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சிலிருந்து உடலை துாக்கி கட்டடத்திற்குள் வைக்கும் இறந்தவர்களின் உறவினர்களும் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து சென்று சுத்தம் செய்ய வேண்டியதுஉள்ளது.எனவே பிரேத பரிசோதனை கட்டடத்திற்கு செல்லும் குழாய்களை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X