விதிமீறலுக்கு மீண்டும் அபராதம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
விதிமீறலுக்கு மீண்டும் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:16

தேவகோட்டை--கொரோனா தொற்று அதிகரிப்பால் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தல், உட்பட அரசின் விதிகளை மீறுவோருக்கு அதிகாரிகள் மீண்டும் அபராதம் விதிக்க துவங்கியுள்ளனர்.ஊரடங்கு தளர்வுகளைஅறிவித்த முதல்வர்மூன்றாவது அலையை தவிர்க்க முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.அபராதம் விதிப்பதை அதிகாரிகள் சில நாட்களாக தவிர்த்த நிலையில் நேற்று மீண்டும் ஆய்வு பணி துவங்கியது. துணை ஆட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராஜரத்தினம், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் அதிகாரிகள்நகரில் உள்ள வர்த்தகநிறுவனங்களில் சோதனை நடத்தினர்.முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்து இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தனர். தொடர்ந்து முக கவசமின்றி செல்வோர்களுக்கு அபராதம் வசூலித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X