சில வரி செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:31

வாலிபரை தாக்கிய கும்பலுக்கு வலை




திருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் லோகேஷ், 21. இவர் நேற்று காலை, டூ - வீலரில் எண்ணுார் விரைவு சாலையில் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் சென்றபோது, கழுத்தில் மாஞ்சா நுால் பட்டுள்ளது. சுதாரித்தவர் நுாலை பிடித்து விட்டார். 'இதற்கு யார் பொறுப்பு' என லோகேஷ் கேட்டுள்ளார். அப்போது சிறுவர்கள் உட்பட 15 பேர் கும்பல், காற்றாடியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, லோகேஷை சரமாரியாக தாக்கி மாஞ்சா நுாலை பறித்து தப்பினர். படுகாயமடைந்த லோகேஷ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாலிபரை தாக்கியோருக்கு 'கம்பி'




அனகாபுத்துார்: அனகாபுத்துார், தாய் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 20. இவரது உறவினர் மகளை, அனகாபுத்துாரைச் சேர்ந்த பாட்ஷா, 22, என்பவர் காதலித்துள்ளார். இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் தகராறு இருந்து வந்தது. பாலாஜியும் அவரது உறவினர் ரவியும், அனகாபுத்துார் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது, பாட்ஷா உள்ளிட்ட மூவர் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பாலாஜிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. சங்கர் நகர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.



194 பேர் குண்டாசில் கைது




சென்னை: தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோர் உட்பட, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 128 பேர், திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 32 பேர், சைபர் கிரைமில் ஈடுபட்ட 14 பேர், கஞ்சா போதை பொருட்கள் கடத்திய 13 பேர் உட்பட 194 பேரை, சென்னை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.



பெண் தற்கொலை முயற்சி




வேப்பேரி: சூளை, காளித்தியப்பா தெருவைச் சேர்ந்தவர் வித்யலட்சுமி, 41. இவரது கணவர் மோகன்ராஜ், மகனை இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்காததால் தம்பதி இடையே, தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வித்யலட்சுமி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மோகன் ராஜ் அவரை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.



செம்பரம்பாக்கத்தில் ஆண் சடலம் மீட்பு




செம்பரம்பாக்கம்: குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில், ஆண் சடலம் மிதந்தது. போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவருக்கு, 50 வயது இருக்கும், அவர் குறித்த வேறு எந்த விபரமும் கிடைக்கவில்லை. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.



குட்கா விற்ற 8 பேர் சிக்கினர்




செம்மஞ்சேரி: தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக வந்த புகாரையடுத்து, செம்மஞ்சேரி போலீசார், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளை, சோதனை செய்தனர். இதில், ஆறு கடைகளில் இருந்து, 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சகாயராஜ் 39, அகமது 25 உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

* ராமாபுரம்: ராமாபுரம், கண்ணதாசன் நகர் பிரதான சாலையில் உள்ள மளிகை கடையில், குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தி.நகர் துணை கமிஷனர் தனிப்படை போலீசார், மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த, திருமலை நகரைச் சேர்ந்த ராஜகுமார் 29, என்பவரை கைது செய்து, ராயலா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 250 பாக்கெட் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தற்கொலைக்கு துாண்டியவர் கைது




புழல்: புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர் 2வது தெருவில் உள்ள வீட்டில் கீதா 38, என்பவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரித்த புழல் போலீசார், அவருடன் அந்த வீட்டில் ஒரு மாதமாக வசித்த மயில் வாகனம் 40, என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் மயில்வாகனம் துாண்டுதலால் கீதா தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.



சூதாடிய 8 பேருக்கு 'காப்பு'




எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் தெருவில் உள்ள வீட்டில் சூதாட்டம் நடப்பதாக, எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்து. போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த விஜயகுமார், பாண்டியராஜன், ரவி, லோகநாதன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். விசாரணையில், எம்.ஜி.ஆர்.நகர் பா.ஜ., பிரமுகரான விஜயகுமார் வீடு வாடகைக்கு எடுத்து, கட்டணம் வசூலித்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.



வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு




கோயம்பேடு: கோயம்பேடில் உள்ள டீக்கடையில் பணி புரிபவர் சீனாத், 18. மெட்டுக்குளம் அருகே நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்திமுனையில் மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.




வடிகாலில் விழுந்த பசு மீட்பு




திருவொற்றியூர்: திருவொற்றியூர் - எண்ணுார் விரைவு சாலை, சக்திபுரம் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் வாயில் அருகேயுள்ள வடிகாலில், பசு ஒன்று தவறி விழுந்தது. இது குறித்து, சரக்கு பெட்டக முனைய காவலாளி, திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி பசுவை மீட்டனர்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X