முடிவு ; 146 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட ... தேனி மாவட்ட கூட்டுறவுத்துறை அரசுக்கு பரிந்துரை | தேனி செய்திகள் | Dinamalar
முடிவு ; 146 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட ... தேனி மாவட்ட கூட்டுறவுத்துறை அரசுக்கு பரிந்துரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:43

தேனி -தேனி மாவட்டத்தில் வாடகை கட்டடங்களில் இயங்கும் 146 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதை கூட்டுறவு பொது வினியோக திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



அதற்கான அனுமதி வேண்டி அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அதில் 17 ஆயிரம் அரசு கட்டடங்களில் இயங்குகின்றன. மீதியுள்ள 6970 கடைகள் வாடகை கட்டடங்களிலும், 3300 சொந்தக் கட்டடங்களில் இயங்குகின்றன. வாடகை கட்டடங்களில் போதிய இடவசதி இல்லாததால் உணவு தானிய மூடைகளை அடுக்கி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையில் எம்.பி., எம்.எல்.ஏ., நிதி போன்றவற்றை பயன்படுத்தி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் இடத்தில் சொந்த கட்டடம் கட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.ஆய்வுஇதனையடுத்து தேனி மாவட்டத்தில் வழங்கல் துறை- பொது வினியோகத்திட்ட அதிகாரிகள் வட்டார அளவில் ஆய்வு செய்தனர். அதன்படி 146 ரேஷன் கடைகள் வாடகை கட்டங்களில் இயங்குவதை கண்டறிந்து அவற்றிக்கு புதிய இடம் தேர்வு செய்து கட்டுவதற்கான வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளனர். அதுதவிர 18 ரேஷன் கடைகளுக்கு ஏற்கனவே புதிய கட்டத்திற்கான அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு பொதுவினியோகத் திட்டம் துணைப்பதிவாளர் மணிகண்டன் கூறியதாவது:அரசு உத்தரவின்படி மாவட்ட இணைப்பதிவாளர் பரிந்துரையில் வட்டார அளவில் ஆய்வு செய்தோம். சொந்த கட்டடங்களில் இயங்காத ரேஷன் கடைகள் கண்டறியப்பட்டு அவற்றிக்கு இடம் தேர்வு செய்து அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நிதித்தேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு கட்டடப்பணிகள் துவங்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X