மினுமினுக்கும் வெள்ளி நகைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:54

சிவகாசிஅழகுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்களே. இது பெரும்பாலும் அழகுக்காகவும், சமூக மதிப்பிற்காவும் அணியப்படுகின்றன. பொதுவாக அணிகலன்கள் பல்வேறு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து செய்யப்பட்டன. இதன் பின் முத்து, பவளம், வைரம், தங்கம், பிளாட்டினம், வெள்ளி என பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அணிகலன்கள் உருவாக்கப்படுகின்றன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணப்பெண், மணமகனை அலங்கரிக்கவும், திருவிழாக்கள், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அணிகலன்களால் அழகுபடுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது சில்வரில் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டியானம், நெக்லஸ், ஜடாரி, தோடு, நெக்லஸ், மாலை, மோதிரம், வளையல், நெத்திசுடி, ஆண்களுக்கு மோதிரம், பிரேஸ்லட், கடாய், செயின் என பல வகைகள் வந்து விட்டன.பார்த்தாலே அசல் தங்க நகைகள் போல் ஜொலிப்பதால் தங்க நகை வாங்க முடியாதவர்கள் நாட்டம் இதன் பக்கம் திரும்பி உள்ளது. உடைக்கேற்ப கலரில் கிடைப்பதால் இதற்கும் தனி மவுசு ஏற்பட்டுள்ளது.சிவகாசி ஆலமரா டிரென்டி ஜூவல்லரி இயக்குநர் ஜெயவேல் மணி: இன்றைய நவீன கால கட்டத்தில் திருமணம், திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் டிரென்டிங்கில் நகைகளை அணிய விரும்புகின்றனர். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு டிசைன்களில், அணியும் உடைகளுக்கு ஏற்றவாறு நகைகளை அணிய விரும்புகின்றனர்.இதற்காக தங்கத்திலான அணிகலன்களை மீண்டும் மீண்டும் வாங்க இயலாது. அதற்கு பதிலாக தங்கம் முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை குறைந்த பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். உடைளுக்கு மேட்ச்சாக நகைகளில் பல்வேறு கலர்களில் கற்கல், மெட்டல்கள் பதிக்கப்பட்டுள்ளன. மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து அணிகலன்களும் இங்கு உள்ளன. ஒருமுறை மட்டுமே அறிமுகப்படுத்த கூடிய ஒன்டைம் ஜூவல்லரி தங்கத்தை போலவே காட்சியளிக்கும், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X