இருந்தும் 'நோ யூஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:55

காப்பீடு திட்டத்தில் குறைபாடுகள் ஏராளம் பலன் அடைய முடியாது தவிக்கும் ஏழைகள்ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 18-மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை தீர்த்து ஏழை மக்கள் பயனடைய அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை வேண்டும் .மாநில அரசின் சார்பில் ரூ. 2 லட்சம், மத்திய அரசின் சார்பில் ரூ. 3 லட்சம் என ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் அதை பாதிக்கப்படுபவர்கள் பயன்படுத்தும்போது பல சிரமங்களை சந்திக்கின்றனர்.ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு உட்பட்டவர்கள் என்ற விதியினால் பலர் காப்பீடு திட்ட அட்டை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதில் சிலர் பொய்யான தகவல் கொடுத்து காப்பீடு திட்ட அட்டை பெறுகின்றனர். இதில் ஏழைகள் அனைவரும் பயன் பெறும் வகையில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் என்பதை ரூ. 2 லட்சமாக உயர்த்தலாம்.சில ஆயிரம் ரூபாய் செலவுக்கு உட்பட்ட மருத்துவ சிகிச்சைகளை பொதுமக்களே நேரடியாக பணம் செலுத்தி வைத்தியம் பார்த்து கொள்கின்றனர். ஆனால் எலும்பு முறிவு, மாரடைப்பு, ஆஞ்சியோகிராம், உயிர் காக்கும் சிகிச்சைகள் , ஆபப்ரேஷன்கள் செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் பணம் கேட்பதால் ஏழை மக்கள் பாதிக்கின்றனர்.ஆஞ்சியோகிராம் பார்க்கும்போது ஒரு அடைப்பு இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றனர். மூன்று அடைப்புகள் இருந்தால் ரூ. லட்சங்கள் கேட்கின்றனர். எலும்பு முறிவு சிகிச்சையில் சில எலும்பு முறிவுக்கு காப்பீடு திட்டம் பொருந்தாது என்கின்றனர்.இதனால் ரூ. 5 லட்சம் வரை மருத்துவம் இலவசம் என நம்பி செல்லும் ஏழை பொதுமக்கள் காப்பீடு திட்ட அட்டை வைத்திருந்தாலும் உயிர்காக்கும் சிகிச்சைகளை பெற முடியாமல் கடனாளி ஆகின்றனர். பலர் சொத்துக்களை இழக்கின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகள் சரியான கல்வியை பெற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இத் திட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளும் நீக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஏழை மக்களின் வேதனை குரலாக உள்ளது.........நிபந்தனை இல்லாத சிகிச்சை வேண்டும்குறைந்தளவு செலவாகும் சிகிச்சைகளை பொதுமக்கள் கஷ்டப்பட்டாலும் தங்களது சொந்த செலவில் செய்து கொள்கின்றனர். ஆனால் லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் உயிர்காக்கும் சிகிச்சைகளை காப்பீடு திட்டத்தின் மூலம் பெற விரும்புகின்றனர். ஆனால் இத்திட்டத்தின் சில விதிமுறைகள் சிகிச்சை பெறமுடியாத நிலையை உருவாக்குகிறது. காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் நிபந்தனை இல்லாத சிகிச்சை பெறுவதற்கு அரசு வழி காண வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.- பால்ராஜ், நிர்வாகி, மக்கள் நீதி மையம், ஸ்ரீவில்லிபுத்துார்.................

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X