செக்போஸ்ட் கட்டி கொடுத்தாச்சு... செயல்பாட்டுக்கு வராது முடக்கம்; வேதனையில் விவசாயிகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
செக்போஸ்ட் கட்டி கொடுத்தாச்சு... செயல்பாட்டுக்கு வராது முடக்கம்; வேதனையில் விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
23:56

சேத்துார்-சேத்தூர் அருகே விவசாய பொருட்கள் திருட்டை தடுக்கும் விதமாக விவசாயிகள் பங்களிப்பில் கட்டிகொடுக்கப்பட்ட செக்போஸ்ட் செயல்பாட்டுக்கு வராது முடங்கி கிடக்கிறது.



இதன் நிலை கண்டு விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரபகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இவற்றில் தென்னை, மா, வாழை உள்ளிட்ட பொருட்கள் அதிகமான அளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு நடைபெற்றுவரும் விவசாய விளைபொருள் திருட்டு, ஆற்று மணல் கொள்ளையர்களால் விவசாயிகளுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வந்தன.



போலீசாரிடம் புகார் தெரிவித்தும் பல வகைகளில் அவர்களுக்கு பிரச்னை தொடர்ந்தது.மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கை காரணமாக 2018ல் சேத்துார் ஆதி புத்திரன் கொண்ட அய்யனார் கோயில் செல்லும் பாதையில் செக்போஸ்ட் அமைக்க அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டார்.நிதி பற்றாக்குறையால் அந்த உத்தரவும் கிடப்பில் போக, தென்னை விவசாயிகள் சங்கம், வட்டார விவசாய விளைபொருள் காவல் கமிட்டி விவசாயிகள் பங்களிப்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் நீரேற்றும் நிலையம் அருகே செக்போஸ்ட், போலீசார் தங்குமிடம் அமைக்கப்பட்டது.ஜூன் 14ல் திறக்கப்பட்டும் தற்போது வரை செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.விவசாய சங்க நிர்வாகிகள்: தற்போது வரை விவசாய விளைபொருள் திருட்டு நின்றபாடில்லை. செக்போஸ்ட் செயல்பட்டால் திருட்டு குறையும். தற்போது கட்டி கொடுத்தும் இதை செயல்படுத்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரத்திற்காக கிடப்பில் வைத்துள்ளனர். விவசாயிகளின் பாதுகாப்பு கருதி இதை செயல்பாட்டிற்கு கொண்டு எஸ்.பி., முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X