100 அடியை எட்டுது பவானிசாகர் | ஈரோடு செய்திகள் | Dinamalar
100 அடியை எட்டுது பவானிசாகர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:24

பவானிசாகர்:பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட உள்ளதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் கொட்டிய கன மழையால், கோவை மாவட்டம் பில்லுார் அணை நிரம்பியது. அணையில் திறக்கப்பட்ட உபரி நீர், பவானி ஆற்றின் வழியாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரத்தாகிறது.



நேற்று காலை, 19 ஆயிரத்து 789 கன அடியாக இருந்த வரத்து, மாலையில் 9,511 கன அடி நீராக குறைந்தது. ஆனாலும், நீர்வரத்து இதே அளவில் தொடர்ந்தால் பவானிசாகர் அணை நீர்மட்டம், இன்று காலை 100 அடியை தொடும்.நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் 99.30 அடி; நீர் இருப்பு 28.1 டி.எம்.சி.,யாக இருந்தது.



பவானிசாகர் அணை மொத்த உயரம் 105 அடி; ஆனால், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, ஜூலை 31 வரையிலான கால கட்டத்தில் 100 அடி மட்டுமே நீரை தேக்க முடியும்.இதனால் 100 அடியை தொட்டதும், உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்படும். பவானி ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X