குளறுபடிகளால் பாடாய்படுத்துதே பைபாஸ் ரோடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:14

ஒட்டன்சத்திரம்- -ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதால் பாதை இல்லாமல் பல கிராம மக்கள் பரிதவிக்கின்றனர்.



ஒட்டன்சத்திரம் நகரில் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகருக்கு வெளியே பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது.திண்டுக்கல் ரோட்டில் லெக்கைகோட்டையில் இருந்து அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, அரசப்பிள்ளைபட்டி வழியாக பழநி ரோட்டை இணைக்கும் வகையில் 10.1 கி.மீ.,க்கு அமைத்தனர். இதற்கு ரூ.160 கோடி செலவிடப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்தும் துவங்கி நடந்து வருகிறது. போக்குவரத்து துவங்கியது முதல் இந்த ரோட்டில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவேரியம்மாபட்டி, பழனி கவுண்டன் புதூர், நாயக்கனூர், குறிஞ்சி நகர், ஐஸ்வர்யா நகர், கொல்லபட்டி , குட்டில்நாயக்கன்பட்ட, உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வர பைபாஸ் ரோட்டில் வசதியோ, வழித்தடமோ இல்லை.இவர்கள் மேற்கண்ட கிராமங்களுக்குச் செல்ல அணுகுசாலையில் எதிர் திசையில் சென்று வர வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து விடுகிறது. வேடசந்தூர் ரோட்டிலிருந்து திண்டுக்கல் செல்வதற்கு வசதி செய்து தரப்படவில்லை.பைபாஸ் ரோடு தொடங்கும் மற்றும் முடியும் இடங்களில் ரவுண்டானா இல்லை. பைபாஸ் ரோட்டில் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. தொடர்ந்து வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பைபாஸ் ரோட்டில் உள்ள இத்தகைய குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இதற்கு ஒரு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.கன்டெய்னர் லாரிகள் சிரமம்சுரேஷ்குமார், தலைவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அசோசியேஷன், ஒட்டன்சத்திரம்: பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் செல்ல அணுகுசாலையில் வரும் கன்டெய்னர் லாரிகள் திரும்புவதற்கு போதுமான வசதி இல்லை. இதனால் முன்னும் பின்னும் சென்று திரும்புகின்றன. அவை செல்லும் வரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணுகுசாலை சந்திக்கும் தாராபுரம் ரோட்டில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் ரோடு பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை.எச்சரிக்கை விளக்குகள் அவசியம்ஆறுமுகம், மாவட்ட தலைவர், தேசியவாத காங்கிரஸ், நாகணம்பட்டி: போக்குவரத்து தொடங்கியது முதல் பைபாஸ் ரோட்டில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. ரோடுகளின் இரண்டு பக்கமும் உள்ள ஊர்களுக்குச் செல்வதற்கு ரோட்டின் நடுவே இடைவெளி விட்டு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X