பா.ஜ., ஆர்ப்பாட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:30

மதுரை-பாரத மாதா, பிரதமர்மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இழிவுபடுத்தி பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து மதுரை மற்றும் மேலுாரில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரையில் நகர் தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமைவகித்தார். பார்வையாளர்கதலிநரசிங்கம், முன்னாள் தலைவர்கள் சசிராமன், ராஜரத்தினம், நிர்வாகிகள்பாலசுந்தர், பாலகிருஷ்ணன், செல்வகுமார், ஹரிஹரன், சகாதேவன், பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலுார்பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர் தலைவர் தென்னரசு வரவேற்றார். பொது செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுசீந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், நிர்வாகிகள் தர்மலிங்கம், மூவேந்திரன், கந்தசாமி, கலை, கலாசார பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வரன், கல்வியாளர்பிரிவு தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ராஜசிம்மன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X