போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:33

போதையில் அடித்துக்கொலைமதுரை: செல்லுார்பாக்கியநாதபுரம்மாரியப்பன் 38. மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவரது நண்பர் மதிச்சியம் சையது ேஷக் முகமது 36. இருவரும் பழைய பேப்பர்களை சேகரிக்கும் தொழில் செய்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு செல்லுார் 50 அடி ரோட்டில் மது அருந்திய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் மாரியப்பன் இறந்தார். சையது ேஷக் முகமது கைது செய்யப்பட்டார்.மின்சாரம் தாக்கி மாணவி பலிமதுரை: எச்.எம்.எஸ்., காலனி சுமத்ரா. அனைத்து மகளிர் போலீஸ் ஏட்டு. இவரது மகள் தர்ஷி 16. தனியார் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேரு நகரில் உள்ள வீட்டின் மாடியில் இறகு பந்து விளையாடிய போது மின்ஒயர் பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தார்.நகை திருட்டுமதுரை: ஹார்விபட்டி முத்துலட்சுமி 64.நேற்றுமுன்தினம் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தபோது 5 பவுன் நகை திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.நகை பறிப்புமதுரை: ஆனையூர் எஸ்தர் தங்கபுஷ்பம்62. சொக்கிக்குளம் உழவர் சந்தை அருகே டூவீலரில் வந்தபோது பின்தொடர்ந்து டூவீலரில் வந்த நபர், 4 பவுன் தாலிச்செயினை பறித்துச்சென்றார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் 43 பவுன் நகைகள் திருட்டுமதுரை: இளமனுார் சபிபுல்லாகான் 24. பக்ரீத்தை முன்னிட்டு குடும்பத்துடன் பரமக்குடி சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டில் 43 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர்களை திருடிய 2 பேர் கைதுமேலுார்: நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக சென்ற இருவரை விசாரித்தனர். சொக்கம்பட்டி ராஜா 28, ஒத்தக்கடை சிதம்பரம்பட்டி ஆறுமுகம் 21, என தெரிந்தது. டூவீலர்களை திருடி வந்ததையும் ஒப்பு கொண்டனர். அவர்களை கைது செய்து 6 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி பக்தர் மரணம்பேரையூர்: புதுச்சேரி அரியகுளம் கருணாகரன் 47, மனைவியுடன் சதுரகிரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு மாங்கனி ஓடை அருகே வரும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆடுகளை திருடியவர் கைதுபாலமேடு: சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடு போயின. எஸ்.ஐ., மீனாட்சிசுந்தரம் இதில் ஈடுபட்ட வயலுார் கண்ணனை 21, கைது செய்து நான்கு ஆடுகள், ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.பெண்ணிடம் செயின் பறிப்புதிருமங்கலம் : பி.சி.எம்.,நகர் நல்லசுப்பு மனைவி ஜெயந்தி 57, வாக்கிங் சென்றபோது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து சென்ற 2 பேர் 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மாயமானவர் எலும்புக்கூடாக மீட்புதிருமங்கலம்: பாண்டியன் நகர் வேலுசாமி மகன் யோகராஜன் 33. மனைவி பொன்மீனா. 2 மகள்கள் உள்ளனர். எண்ணெய் வியாபாரம் செய்த யோகராஜன்ஏப்ரலில் மாயமானார். ஒரு மாதத்திற்கு பின் கட்ராம்பட்டியில் அவரது டூவீலர் மீட்கப்பட்டது. பயன்பாடு இல்லாத தோட்டத்தில் எலும்புக்கூடு கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். யோகராஜன் உடைகளை மனைவி அடையாளம் காட்டியதையடுத்து எலும்புக்கூடை கைப்பற்றி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.லாட்டரி சீட்டு விற்ற பெண் கைதுஉசிலம்பட்டி: நகரில் போலீசார்நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற தேவகியை 61, கைது செய்தனர். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1020 லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X