பல்கலையில் சி.சி., சான்று வழங்குவதில் தேக்கம் | மதுரை செய்திகள் | Dinamalar
பல்கலையில் சி.சி., சான்று வழங்குவதில் தேக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:40

மதுரை -மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககத்தில் (டி.டி.இ.,) மாணவர்களுக்கு சி.சி., (கோர்ஸ் கம்ப்ளிஷன்) சான்று வழங்குவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.டி.டி.,யில் 21க்கும் மேற்பட்ட யு.ஜி.,16க்கும் மேற்பட்ட பி.ஜி., 35க்கும் மேற்பட்ட டிப்ளமோ படிப்புகள் உள்ளன. ஆண்டுக்கு பலஆயிரம் மாணவர்கள்படிப்பை நிறைவுசெய்கின்றனர். இவர்கள் உயர்படிப்புக்கு சி.சி., சான்றிதழ் அவசியம். உரிய முறையில் விண்ணப்பித்தாலும் சான்று வழங்குவதில் பல நாட்கள் இழுத்தடிக்கப்படுவதாகவும், தற்போது நுாற்றுக்கணக்கான சான்றுகள் வழங்காமல் தேங்கிக் கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.பாதிக்கப்பட்ட தேனி மாணவி ஒருவர் கூறுகையில், “இளங்கலை முடித்தேன். சி.சி., சான்று கோரிஒரு மாதமாக அலைகிறேன்,'' என்றார்.ஊழியர்கள் கூறுகையில்,'டி.டி., இயக்குனர், கூடுதல் தேர்வாணையர், துறைப்பேராசிரியர் ஆகிய மூன்று பதவிகளை ஒருவரேவகிக்கிறார். கூடுதல் தேர்வாணையர் 'பொறுப்பு' வேறு பேராசிரியருக்கு வழங்கினால் இப்பிரச்னை தீரும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X