ஊரணி நடுவில் செயற்கை தீவு அமைக்க உத்தரவு | மதுரை செய்திகள் | Dinamalar
ஊரணி நடுவில் செயற்கை தீவு அமைக்க உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
05:41

மதுரை-மதுரை மாநகராட்சி பகுதி ஊரணிகள் துார்வாரும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். வல்லானந்தபுரம் ஊரணி நடுவில் செயற்கை தீவு அமைக்க உத்தரவிட்டார்.மாநகராட்சியில் 33 ஊரணிகள் உள்ளன. இதில் 10 ஊரணிகள் ஹைடெக் அராய் நிறுவன நிதியில்தானம் அறக்கட்டளை மூலம் துார்வாரப்பட்டு 7ல் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. மற்ற ஊரணிகளை துார்வார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வில்லாபுரம் கண்ணிமார் ஊரணியை துார்வாரவும், வல்லானந்தபுரம் ஊரணி நடுவில் செயற்கை தீவு அமைத்து, பறவைகள் கூட பழ மரக்கன்றுகள் நடவும் கமிஷனர் உத்தரவிட்டார். முத்துப்பட்டி புதுக்குளம் கல்தார் ஊரணியை பராமரிக்கவும், அருகேயுள்ள நுாலகத்திற்கு மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டார்.தானம் அறக்கட்டளை நிர்வாகி லோகேஷ், திட்ட தலைவர் நகுவீர் பிரகாஷ், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர்கள் பாபு, முருகன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன் சென்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X