புகையிலை பொருள் விற்பனை; ஒரே நாளில் 20 கடைக்கு 'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:02

திருப்பூர்:தடை செய்த புகையிலை பொருள் விற்பனை செய்த 20 கடைகளுக்கு திருப்பூரில் நேற்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவை பூட்டி 'சீல்' வைக்கவும் சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.இதையடுத்து திருப்பூரில் நேற்று மாநகர போலீசார், நகர் நல அலுவலர், உணவு பொருள் பாதுகாப்பு துறை அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.உதவி கமிஷனர்கள் வெற்றிவேந்தன், வரதராஜன், உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை, நகர் நல அலுவலர்பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.இதில் ஏ.பி.டி., ரோடு பகுதியில் ஒரு கடையில் 50 கிலோ தடை செய்த புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வடக்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 19 கடைகளில் நுாற்றுக்கணக்கான பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 20 கடைகளும் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மாநில அரசு தடைசெய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு வைப்பது கடும் குற்றம்.தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடத்தப்படும். கடைகள் மீது 'சீல்' வைப்பு மற்றும் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தனர்.l திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் தடை செய்த புகையிலைப் பொருள் விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதியாத இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.தமிழக சுகாதார துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில், போலீசார் மற்றும் துறை அலுவலர்கள் தீவிர சோதனை மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X