காலமெல்லாம் கல்வி வாழும்... | திருப்பூர் செய்திகள் | Dinamalar
காலமெல்லாம் கல்வி வாழும்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:06

'கற்கத் தகுந்த நுால்களை குற்றமற கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்' என, திருவள்ளுவர் சொல்லிவிட்டு சென்றதை மெய்யாக்க தயாராகிவிட்டனர், 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள்.இங்கே மாணவர்கள் என்பவர்கள் சீருடையை மாட்டிக்கொண்டு, ஆசிரியர் முன் கைக்கட்டி பாடம் கற்கும் குட்டீஸ்கள் இல்லை. குடும்ப சூழல் காரணமாக நாள் முழுக்க கஷ்டப்பட்டு கூலிவேலைக்கு செல்வோர், 100 நாள் வேலையாட்கள், தொழிற்சாலையில் பணிபுரிவோர்.தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாத, 3 லட்சத்து, 10 ஆயிரம் பேருக்கு, அடிப்படை எழுத்தறிவு வழங்கிடும் நோக்கில், 'கற்போம் எழுதுவோம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இதற்காக மையம் அமைத்து, மையத்திற்கு, 20 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு, ஆசிரியர்கள், தன்னார்வலர்களை கொண்டு பாடம் எடுக்கப்பட்டது. இவர்களுக்கு, கடந்த மார்ச், 27ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 29ம் தேதி முதல், 31 வரை மதிப்பீடு முகாம் நடத்த, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.சமூக இடைவெளி கருதி, மைய அளவில் ஒரு நாளைக்கு, காலையில் - 3 பேர் மதியம் -3 பேர் பங்கேற்பர். படித்தல், எழுதுதல், மற்றும் எண்ணறிவு ஆகிய திறன்களின் அடிப்படையில் மதிப்பீடு அமையும்.குறைந்தபட்சம், 33 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், 580 மையங்களில், 11 ஆயிரத்து, 600 பேருக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X