வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் | கடலூர் செய்திகள் | Dinamalar
வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:27

நாகப்பட்டினம், : கடலுார் மாவட்டம், லால்பேட்டையை சேர்ந்தவர் சாலிகாத் பேகம், 50. இவரது குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர், நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு வேனில் சுற்றுலா வந்தனர்.



நாகூர் தர்காவை பார்த்து விட்டு, நேற்று இ.சி.ஆர். வழியாக வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர். கருவேலங்கடை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.வேனில் சிக்கியவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அவ்வழியாக சென்ற, சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஞானசேகர், விபத்தில் காயமடைந்தவர் களுக்கு முதலுதவி அளித்தார்.விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X