டி.கே.மார்க்கெட் தரைக்கடைகள் ஏலம்: எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
டி.கே.மார்க்கெட் தரைக்கடைகள் ஏலம்: எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:35

கோவை;கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில், புதிதாக கட்டியுள்ள தரைக்கடைகளை பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டுமென கூறி, வியாபாரிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.கோவை, தியாகி குமரன் மார்க்கெட்டில், 88 கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்தும், தரைக்கடைகள் நடத்தப்பட்டன.கோவை தியாகி குமரன் மார்க்கெட் அருகே ராஜ வீதியையும், பெரிய கடை வீதியையும் இணைக்கும், 30 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்தாண்டு அகற்றப்பட்டன. அக்கடை வியாபாரிகளுக்கு மாற்று இடமாக, வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டது. அங்கு, புதிதாக, 89 கடைகள் கட்டப்பட்டுள்ளன.புதிதாக கட்டிய கடைகள் என்பதால், பொது ஏல முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இச்சூழலில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்கெட் வளாகத்துக்குள் தரைக்கடை வியாபாரிகள், நேற்று உள்ளிருப்பு போராட்டம்நடத்தினர்.அவ்வியாபாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி கமிஷனர் மனது வைத்தால், பழைய வியாபாரிகளுக்கே கடை ஒதுக்கீடு செய்யலாம். புதிதாக கடை கட்டவில்லை. பழைய வாகன நிறுத்துமிடத்தில், தரைக்கடை அமைத்து, விளக்கு வசதி செய்துள்ளனர்.மாநகராட்சிக்குரிய சுங் கம் செலுத்த, தயாராக இருக்கிறோம். இக்கடையை வைத்தே எங்களது வாழ்வாதாரம் இருக்கிறது. பொது ஏல முறையை நடைமுறைப்படுத்தினால், வெளி வியாபாரிகள் நுழைந்து விடுவர்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X