பூட்டை உடைத்து 24 பவுன் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீசார் வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:36

கோவை;நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து, 24பவுன் நகைகளை கொள்ளையடித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். * சித்தாபுதுாரை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா, 26. இவர் தனது தாயாருடன் பொருட்கள் வாங்க, காந்திபுரம், 100 அடி ரோட்டுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டிலிருந்த மூன்று சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். கார்த்திக்ராஜா அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். * ரத்தினபுரியை சேர்ந்தவர் சுதி, 30; அக்கவுன்டன்ட். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருந்தார். மனைவியுடன் வேலைக்கு சென்றிருந்த சமயம், மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து, ஒரு பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து சுதி அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். * ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் அசோக், 23. கடந்த, 10 ஆண்டுகளாக கோவையில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். அவிநாசி ரோடு சாஸ்திரி நகரில் குடியிருந்து வரும் இவர், நேற்று காலை பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அன்னுாரிலும் கொள்ளைகோவில்பாளையம் அருகே குரும்பபாளையம், வையாபுரி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 49. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, எட்டு சவரன் நகையை காணவில்லை. புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X