குக்கர் தாக்குதல்; முன்னாள் கவுன்சிலர் பலி: 'சேவல் சண்டையால்' விபரீதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:36

கோவை;சேவல் வாங்கி விட்டு பணம் தராததால், தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தார்.ஒண்டிபுதுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன், 57; அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டில் கார்த்திகேயன், 33 என்பவர் குடியிருந்து வந்தார். இவரது நண்பர் சூலுார் பாரதிபுரத்தை சேர்ந்த சம்பத்குமார், 32. கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால், இவருக்கு சீனிவாசனுடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த, 16ம் தேதி சம்பத்குமார் தன்னிடமிருந்த, மூன்று சேவல்களை சீனிவாசனுக்கு விற்பனை செய்தார். அதற்கான பணத்தை, சில நாட்களில் தருவதாக கூறினார். கடந்த வாரம் சீனிவாசனிடம் சேவலுக்கான பணத்தை, சம்பத்குமார் கேட்டுள்ளார்.சேவல்கள் இறந்து விட்டதால், பணம் தர சீனிவாசன் மறுத்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சம்பத்குமார், குக்கர் மூடியால் சீனிவாசனை தாக்கினார்.படுகாயமடைந்த சீனிவாசனை, அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை முயற்சி வழக்கு பதிந்த சிங்காநல்லுார் போலீசார், சம்பத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் உயிரிழந்தார். சிங்காநல்லுார் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X