போதை பொருள் விற்பனை 660 வழக்கு; 673 பேர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போதை பொருள் விற்பனை 660 வழக்கு; 673 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
06:37

கோவை:கடந்த ஏழு மாதங்களில், கஞ்சா, குட்கா, போதை மாத்திரை, ஊசி விற்றதாக, 660 வழக்குகளில், 673 பேரை மாநகர போலீசார் கைது செய்தனர்.கோவையில் சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா, குட்கா, பான்பராக், போதை மருந்துகள், ஊசிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜன., முதல் ஜூலை, 22 வரை, 660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 673 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.3,248 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஜூன், 26ல் கர்நாடகாவில் இருந்து, கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்கள் பறிமுதலும் அடங்கும். கோவை மாநகர போலீசார் அறிக்கை: கஞ்சா விற்றதாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 பேர் கைது செய்யப்பட்டு, 55.70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மாத்திரை, ஊசிகள் விற்றதாக, 7 வழக்குகளில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் விற்றவர்கள், கஞ்சா விற்ற, ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. சட்டவிரோத மது, வெளிமாநில மது மற்றும் கள் விற்பனை குறித்த, 672 வழக்குகளில், 765 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 15 ஆயிரத்து 835 மது பாட்டில்களும், 21 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாநகர போலீஸ் சார்பில், போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதை பொருள் விற்பனை குறித்த தகவல்களை, 81900 -00100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணுக்கும், 94981 -81213 மற்றும் 0422--2300970 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X