புவிசார் குறியீடு பெறப்போகும் அம்பை 'சொப்பு' சாமான்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
07:06

மதுரை:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படும், 'சொப்பு' சாமான்கள் அதன் பாரம்பரியத்திற்காக புவிசார் குறியீடுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கண்ணைக் கவரும் வண்ணங்களில் மரத்தால் இழைக்கப்பட்ட சின்னஞ்சிறு சமையலறை பாத்திரங்களுக்கு, மழலைகளின் உலகத்தில் எப்போதும் இடம் உண்டு. நம்மிடம் மறந்து, மறைந்து போன ஆட்டு உரல், அம்மிக்கல், திருவைக்கல் போன்ற கருவிகள் இன்றளவும் அம்பாசமுத்திரத்தின் சொப்பு சாமானில் இடம்பெற்று பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.கடைசல் என்ற பெயரில் அம்பாசமுத்திரத்தை சுற்றியுள்ள வாகைகுளம், மன்னார்கோவில் பகுதிகளில் சொப்பு சாமான்கள் தயாரிக்கப்படுகிறது. 1946ல் வெளியிடப்பட்ட, 'காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா' என்ற ஆங்கில புத்தகத்தில் மர விளையாட்டு சாமான்கள் தயாரிக்கும் இடங்களில் அம்பாசமுத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல 1947ல் வெளியான, 'ரூரல் ப்ராப்ளம்ஸ் ஆப் மெட்ராஸ்' என்ற புத்தகத்தில் அம்பாசமுத்திரம், மதுரை ஐராவதநல்லுார் என்ற இடமும் சொப்பு சாமான் தயாரிப்புக்கு பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆரம்பகாலத்தில் மஞ்சள் கடம்பு, தேக்கு, ரோஸ்வுட் மரக்கட்டைகளில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மஞ்சள் கடம்ப மரங்கள் நமது பாரம்பரியத்தோடு தொடர்புடையது என்றாலும் இம்மரங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது.தற்போது கிடைக்கும் ரப்பர் மரம் மற்றும், 'யூக்கலிப்டஸ்' மரக்கட்டைகளில் தயாரிக்கப்படுகின்றன. மரத்தண்டு வெண்மையாக இருப்பதாலும் கடைவதற்கு எளிதாக இருப்பதாலும் இவற்றை வெட்டி ஆறு மாதங்களுக்கு முன்பே காயவைத்து விடுகின்றனர். பின், 1 அடி நீள கட்டையாக வெட்டி இழைக்கின்றனர்.விளையாட்டு சொப்பு சாமான்கள் மட்டுமின்றி, குழந்தைகளுக்கான மூன்று சக்கர நடைவண்டி, குதிரைவண்டி, 'ஏரோபிளேன்', ரயில் இன்ஜின் மற்றும் பூஜையறை செட் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையான சொப்பு சாமான்கள், மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள மதுரை, 'அக்ரி பிசினஸ் இன்குபேஷன்' அமைப்பின் வழியாக புவிசார் குறியீடுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அமைப்பின் சி.இ.ஓ., சிவகுமார் கூறுகையில், ''நபார்டு வங்கி, எம்.எஸ்.எம்.இ., நிறுவனம் இணைந்து தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு உதவுகிறோம். கம்பம் திராட்சை, விளாச்சேரி பொம்மை, மதுரை மரிக்கொழுந்து, ஆத்துார் வெற்றிலை, கன்னியாகுமரி மட்டி வாழை, துாத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்துள்ளோம்.''சொப்பு சாமானை அடுத்து, இன்னும் ஏழு பொருட்கள் பட்டியலில் உள்ளன. புவிசார் குறியீடு பெற்றால், 'பிராண்டிங்' கிடைத்துவிடும். அதன்பின், விற்பனை வாய்ப்பு எளிதாகும். வேறு யாரும் இந்த பெயரில் சொப்பு சாமான்கள் தயாரிக்க முடியாது,'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X