100 அடியை எட்டியது ஆழியாறு அணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
100 அடியை எட்டியது ஆழியாறு அணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
07:17

பொள்ளாச்சி;கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆழியாறு அணை நேற்று மதியம், 100 அடியை எட்டியது.பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையான, ஆழியாறு அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்துக்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் ஆழியாறு நீரை ஆதாரமாக கொண்டுள்ளன.கடந்த சில வாரங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்வதால், அணை நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 2,202 கனஅடி வரத்து இருந்தது. தொடர்ந்து, நீர் வரத்து, 3,000 கனஅடியாக அதிகரித்ததால், மதியம், 1:00 மணிக்கு, 100 அடியை எட்டியது. கடந்த, ஒரு வாரத்தில் நீர்மட்டம், 14 அடி உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X