விஜயபாஸ்கரின் மனைவி வங்கி லாக்கர்கள் முடக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
07:23

கரூர்:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் சகோதரரின் வங்கி லாக்கர்களை முடக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 22ல் சென்னை, கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் உட்பட, 26 இடங்களில் சோதனை நடத்தி, 25.50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்களை திரட்ட, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:தன் உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில், விஜயபாஸ்கர் சொத்து குவித்து இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. விஜயபாஸ்கர் மனைவி, சகோதரர் மற்றும் பினாமிகளின் வங்கி லாக்கர்களை சோதனையிட முடிவு செய்துள்ளோம்.இதன்படி, விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோரது வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. இதற்காக வங்கியிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முன்னிலையில், லாக்கர்களை திறந்து சோதனை நடத்தப்படும். அதில் ஆவணங்கள் இருந்தால், ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X