ஆழப்படுத்தப்பட்ட ஏரி; மக்கள் குளிக்க தடை | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஆழப்படுத்தப்பட்ட ஏரி; மக்கள் குளிக்க தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
16:09

பவானி: காடையாம்பட்டி ஏரி, ஆழப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானியை அடுத்த காடையாம்பட்டியில், 70 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. கரைப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில், பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே குடிமராமத்து திட்டத்தில், 20 அடிக்கு ஏரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இது தெரியாமல், கடந்த சில மாதங்களாக, ஏரியில் குளிக்கும் சிலர், நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர் பலியை தவிர்க்கும் வகையில், ஏரிக்கரை முன், பவானி போலீசார், அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், காடையாம்பட்டி ஏரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.



 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X