விரக்தியில் விவசாயிகள்! ஒட்டன்சத்திரத்துக்கு பி.ஏ.பி., குடிநீர் திட்டத்தால்வறட்சியின் பிடியில் தவிக்கும் சுல்தான்பேட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
22:44

சூலுார்:நீர்நிலை நிலைகளுக்கு போதிய வரத்து இல்லாமல், வறண்டு கிடக்கும் சூழலில், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு, பி.ஏ.பி., தொகுப்பு அணையில் இருந்து நீர் கொண்டு செல்லும் திட்டத்தால், சுல்தான்பேட்டை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்ட கால கோரிக்கையை புறக்கணித்து விட்டு, புதியதிட்டத்தை அறிவித்திருப்பதற்கு, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சூலுார் தாலுகாவின் தெற்கு பகுதியில், சுல்தான்பேட்டை ஒன்றியம் உள்ளது. 20 ஊராட்சிகள் உள்ளன; 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில். இணைத் தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு அதிகளவில் உள்ளது.மேட்டுப்பகுதிகள்ளப்பாளையம், சின்னக் குயிலி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, போகம்பட்டி, பொன்னாக்கானி, பச்சாபாளையம், பூராண்டாம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், இந்த ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் வருகின்றன.பூகோள ரீதியாக இக்கிராமங்கள் மற்ற பகுதிகளை காட்டிலும் மேட்டுப்பகுதியில் உள்ளதால், இங்குள்ள நீர்நிலைகளுக்கு, மழைநீர் வரத்து, ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:சுல்தான்பேட்டை ஒன்றியத்தின் மேற்கு பகுதியில், 10 ஆயிரத்துக்கு அதிகமான ஏக்கரில், கீரை, பீட்ரூட், தக்காளி, மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம், மஞ்சள் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கால்நடைகளும் அதிகளவில் உள்ளன. அனைத்து தொழில்களுக்கும் தண்ணீர் பிரதானமாக தேவைப்படுகிறது. எல்லா ஊர்களிலும் குளம், குட்டைகள் உள்ளன. பருவ மழை காலங்களில் கூட, இப்பகுதி நீர்நிலைகளில், மழை நீர் சேகரமாவதில்லை. நீர் வழித்தடங்களும் மாயமாகியுள்ளன. பல ஆண்டுகளாக, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. போர்வெல்கள் மூலம் கிடைக்கும் நீரை கொண்டுதான் விவசாயம் நடக்கிறது. சிலருக்கு அதுவும் வாய்ப்பதில்லை. 1,500 அடி ஆழம் வரை போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.பல ஆண்டு கோரிக்கைமேற்கு பகுதி கிராமங்களுக்கு பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்தோ, ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தோ குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.கடந்த ஆட்சிக்காலத்தில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முயற்சிகள் தொடருமா எனத்தெரியவில்லை.விவசாயிகள் விரக்திஇதற்கிடையில், பி.ஏ.பி., யில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என, அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பக்கத்தில் இருக்கும் எங்கள் பகுதிக்கு கொண்டு வரும் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால், தொலைதுாரத்தில் உள்ள பகுதிக்கு, தண்ணீர் கொண்டு செல்வோம் எனக்கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் விவசாயத்தை கைவிட முடிவு செய்துள்ளனர். எனவே, அரசு உடனடியாக, எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, இப்பகுதி நீர்நிலைகளை நிரப்புவதற்கான வழிமுறைகளை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X