'தரம்' உயர்ந்தால் போதுமா; வசதி 'தாராளம்' ஆகுமா? அவிநாசி, பூண்டி மக்கள் போடும் 'கணக்கு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
01:21

அவிநாசி:கடந்த, 2011 மக்கள் தொகை அடிப்படையில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், நகராட்சியாக தரம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், நகரின் உட்கட்டமைப்பு முதற்கொண்டு, மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்; அதேநேரம், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கிடைக்கும் நிர்வாக வசதி, நகராட்சி நிர்வாகத்தில் கிடைக்காது என்ற கருத்து மற்றொரு புறம் நிலவுகிறது.உள்ளாட்சி நிர்வாக நிலையை நன்கறிந்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது;மக்கள் தொகை தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, உள்ளாட்சி நிர்வாகங்கள் தரம் உயர்த்தப்படுவதும், அதன் மூலம் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதும் அவசியமானதுதான்.அதே நேரம், தரம் உயர்த்தப்படும் அந்தஸ்த்துக்கேற்ப அனைத்து பணிகளும் மிகச்சரியாக நடக்குமேயானால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.நகராட்சி கட்டமைப்பில், கமிஷனர் அந்தஸ்தைப் பெற்ற அதிகாரியின் கட்டுப்பாட்டில், சுகாதாரப்பிரிவு, கட்டட அனுமதி விவகாரங்களை கவனிக்க நகரமைப்பு பிரிவு, நில அளவை பிரிவு, குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள பொறியியல் பிரிவு என பல பிரிவுகள் உள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் தேவையான அலுவலர்கள், ஊழியர்கள் பணியமர்த்தி, நிர்வாகப்பணிகள் தடையின்றி மேற்கொண்டால், நகரின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பல்வேறு பேரூராட்சிகளின் நிலை, இன்று மேம்பட்டதாக இல்லை. பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அடிப்படை வசதிகள் தேங்கிக் கிடக்கின்றன என்ற புகார் இருந்து வருகிறது.நகராட்சிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் உள்ளூர் அமைச்சர்களின் ஆதரவும் அவசியம்.நீர்நிலை, குளம் குட்டை, அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகமுள்ள அவிநாசி, திருமுருகன்பூண்டி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். இது சவாலானது.திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், தற்போதுள்ள சிறப்பு நிலை அந்தஸ்துக்கு ஏற்ப பணியாளர் பணியிடம், இதுவரை உருவாக்கப்படவில்லை.எனவே, சரியான திட்டமிடல் மூலம், பேருராட்சிகளின் அந்தஸ்தை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே, அதன் பலன் கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X