நொய்யல் ஆற்றில் குளிப்பது விளையாட்டாத்தான் போச்சு! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
நொய்யல் ஆற்றில் குளிப்பது விளையாட்டாத்தான் போச்சு!
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
01:37

தொண்டாமுத்தூர்:நொய்யல் ஆற்றில், நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், ஆபத்தை உணராமல், இளைஞர்கள் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில், தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், நொய்யலாற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை, இரண்டாவது தடுப்பணையான குனியமுத்தூர் தடுப்பணையில், ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில் இறங்கி குளிப்பது, ஆற்றின் நடுவே சென்று 'செல்பி' எடுப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களின் இதுபோன்ற செயல்களால், ஆற்று நீரில் அடித்து செல்லப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகள் நீர்நிலைகளுக்கு, செல்லாமல் தடுக்க வேண்டும். போலீசாரும், அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, தடுப்பணையில் குளிப்பவர்களை விரட்டி வருகின்றனர். இருப்பினும், போலீசார் சென்ற பின், இளைஞர்கள் மீண்டும் ஆற்றில் இறங்கி விடுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X