அரசு மருத்துவமனையில் வாகனங்களால் இடையூறு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவமனையில் வாகனங்களால் இடையூறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
06:37

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவுப்பகுதியில் கண்டபடி ஏராளமான டூவீலர்களை நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



அரசு தலைமை மருத்துவமனையாக இருந்து தற்போது மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும், வளாகத்தில் டூவீலர்கள், கார்களை நிறுத்த இடவசதி, பார்க்கிங் பகுதி இல்லை. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.உள் நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பிரசவ வார்டுகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.



இவர்களின் உதவியாளர்கள், பார்க்க வரும் உறவினர்கள், டாக்டர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். இதை தடுக்க மருத்துவமனை நுழைவு உள்பகுதியில் வாகனங்களை நிறுத்த நிர்வாகம் உத்தரவிட்டது.ஆனால் நுழைவுப் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் டூவீலர்கள், கார்களை பாதைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர்.



ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் நிலவுகிறது.வெளி நபர்கள், டாக்டர்கள், பணியாளர்களுக்கு தனித்தனி பார்க்கிங் பகுதி களை ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X