தேர் செல்லும் வீதியில் ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
22:57

மேட்டுப்பாளையம்:காரமடையில், தேர் செல்லும் வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவில் முன்புள்ள கடையை அகற்றக்கோரி, கடை வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் முன், தேர் செல்லும் வீதிகள், சொர்க்கவாசல் வீதிகளில், கடைகள் வைத்து இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கோவிலுக்கு வந்த மாவட்ட கலெக்டர் சமீரனிடம், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றும்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில், மேட்டுப்பாளையம் தாசில்தார் சர்மிளா, காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் தெய்வ பாண்டியம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலையில், தேர் செல்லும் நான்கு வீதிகளிலும், சொர்க்கவாசல் வீதியிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இதில் அரங்கநாதர் கோவில் முன்பு, தேங்காய் பழம் மற்றும் பூஜை பொருட்களை விற்பனை செய்யும், கோவில் நிர்வாகம் ஏலம் விட்ட கடை உள்ளது. அந்த கடையை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றவில்லை. சாலையில் உள்ள இக்கடையையும் அகற்ற வேண்டும் என, பாதிக்கப்பட்ட கடை வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி, இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என கூறியதால், கடை வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


நடவடிக்கை எடுக்க உறுதிசெயல் அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:காரமடையில் தேர் செல்லும் நான்கு வீதிகளிலும், சொர்க்கவாசல் வீதியிலும் ஆக்கிரமித்திருந்த, 20 கடைகள் அகற்றப்பட்டன. தவிர, சாலை வரை பொருட்களை வைத்து, வியாபாரம் செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக, கடைகள் வைத்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய சாலைகளில், மேலும் யாரும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்காமல் இருக்க, பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
27-ஜூலை-202108:27:40 IST Report Abuse
ellar காசு பார்த்த வியாபாரிகள் தங்களது ஆசைகளை கட்டுப்படுத்துவதம் நெடுஞ்சாலை பிரச்சினைகளை கண்டுகொள்வதும் மிக அரிது. எனவே இது காரமடையை பொருத்த அளவில் அத்யாவசியமான நடவடிக்கை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X