அலையாத்தி காடுகளை காக்க நடவடிக்கை: கனிமொழி கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
அலையாத்தி காடுகளை காக்க நடவடிக்கை: கனிமொழி கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
23:50

சென்னை: எண்ணுார் மீனவர்களின் வாழ்வாதாரத்தை, ஆற்றை, அலையாத்தி காடுகளை காப்பாற்ற, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக, கனிமொழியின் டுவிட்டர் பதிவு:


எண்ணுார் காட்டுக்குப்பம் மீனவ கிராம நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். அப்போது, 'எண்ணுார் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலையும், மணலையும் எண்ணுார் கழிமுகத்தில் கொட்டுகின்றனர். இதனால், நீர் நிலைகளில் ஏற்பட்ட மாசு, கிராமத்தினர் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர் என, தெரிவித்தனர்.


கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இந்த மக்களின் போராட்டங்கள், கோரிக்கைகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை, ஆற்றை, அலையாத்தி காடுகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறேன். இவ்வாறு, கனிமொழி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X