ரோசையா பேரன் எனக் கூறி ரூ.92 லட்சம் மோசடி | சென்னை செய்திகள் | Dinamalar
ரோசையா பேரன் எனக் கூறி ரூ.92 லட்சம் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
00:10

சென்னை: தமிழக முன்னாள் கவர்னர் ரோசையா பேரன் எனக் கூறி, பண மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.


அடையாறு, பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது நுாருதீன், 61. மெடிக்கல் ஸ்டோர் நடத்துகிறார். இவரிடம், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த நாகராஜ், 31, என்பவர், தன்னை முன்னாள் கவர்னர் ரோசையாவின் பேரன் எனக் கூறி அறிமுகமாகியுள்ளார். முகமது நுாருதீனுக்கு கடன் தேவையென அறிந்த நாகராஜ், 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.


இதற்கு, 1 கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி, 2019, 2020ம் ஆண்டுகளில், மூன்று தவணையாக, 92 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.பேசியபடி, வங்கிக் கடன் வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்ட போது, ரோசையா பெயரைக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


சந்தேகமடைந்து முகமது நுாருதீன் விசாரித்ததில், ரோசையா பெயரைக் கூறி மோசடி செய்தது தெரிந்தது. பின், சாஸ்திரிநகர் போலீசில் அளித்த புகாரின்படி, நாகராஜை கைது செய்த போலீசார், மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை விஷ்ணுசாகர், 73, சகோதரி பூர்ணிமா, 40, ஆகியோரை தேடுகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X