கால்வாய் பாலத்தில் குழி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கால்வாய் பாலத்தில் குழி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:14

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியில், பி.ஏ.பி., கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, புளியங்கண்டி வழியாக ஆழியாறு அணை மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது.இவ்வழித்தடத்தில் ஆழியாறு கால்வாய் செல்வதையடுத்து, வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் நடுவே குழியாக இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'புளியங்கண்டி பகுதியில் வசிப்போர், இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் குழியாக இருப்பதால் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கவனமின்றி வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X