சொத்து வரி குறைக்க வேண்டும்! பா.ஜ., செயற்குழுவில் தீர்மானம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சொத்து வரி குறைக்க வேண்டும்! பா.ஜ., செயற்குழுவில் தீர்மானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:17

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரியை மறு ஆய்வு செய்து, குறைக்க வேண்டும்,' என பா.ஜ., நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி நகர பா.ஜ., செயற்குழு கூட்டம், தனியார் மண்டபத்தில் நடந்தது. நகர தலைவர் மணிகண்டகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வசந்தராஜன் முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தின், ஆள் இறங்கு குழிகளின் பழுதடைந்த மூடிகளை சீரமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும். நாச்சிமுத்து பிரசவ விடுதி வளாகத்தில் செயல்படும் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில், கட்டண விபரங்களை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும்.புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள இலவச கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும். ஓட்டல்கள், இறைச்சிக்கடைகள், மளிகைக்கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது. இதை மறு ஆய்வு செய்து, குறைக்க வேண்டும்.இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X