மருத்துவமனைக்கு இடத்தை ஒப்படைங்க! குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:44

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை கையகப்படுத்தி, அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்க வேண்டும்,' என, அரசியல் கட்சியினர், சமூக இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.பொள்ளாச்சி அரசியல் கட்சியினர், சமூக இயக்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை அருகில் செயல்படாமல் இருந்த பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடம் முழுவதும், அரசு கையகப்படுத்தி மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக இயக்கங்கள் சார்பில், மாவட்ட கலெக்டர் வழியாக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது. தொடர் போராட்டத்தின் காரணமாக, பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி மட்டும் விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இன்னொரு பகுதியில் உள்ள கட்டடம், லாப நோக்கத்துக்காக கையகப்படுத்தாமல் விடப்பட்டது.நகராட்சியால் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, துணிக்கடை நடக்கிறது. ஓர் ஆண்டாக வாடகை செலுத்தாததால், நகராட்சி நிர்வாகம் பூட்டி 'சீல்' வைத்தது.எனவே, கட்டடத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்து அங்குள்ள காலியிடத்தையும், கட்டடத்தையும் அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்.'பார்க்கிங்' வேண்டாம்!பஸ் ஸ்டாண்ட் அருகே, நாச்சிமுத்து பிரசவ விடுதி கடந்த, நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. கடந்த அ.தி.மு.க., நகராட்சி நிர்வாகத்தால் மருத்துவமனை மூடப்பட்டது.மருத்துவமனை வளாகத்தில் காலியிடம் இருசக்கர வாகன நிறுத்தம் செய்ய தனியாருக்கு குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தம் செய்ய, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.நகராட்சி கமிஷனரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவமனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், 'பார்க்கிங்' ஏலத்தை ரத்து செய்து, வளாகம் முழுவதும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X