பஸ்கள் எண்ணிக்கை குறைவு: நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:45

உடுமலை:உடுமலை நகரில், வழக்கம்போல், அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக, ஒவ்வொரு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும், குறிப்பிட்ட சதவீத அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவ்வகையில், உடுமலை அரசு போக்குவரத்துக்கழக கிளையில், 58 டவுன் பஸ்கள் உள்ள நிலையில், 33 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், நாளுக்கு நாள், பஸ்சில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில், அச்ச உணர்வுடன் பயணிகள் பயணிக்கின்றனர்.மக்கள் கூறுகையில், 'தற்போது இயங்கும் பஸ்கள் போதுமானதாக இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட நேர இடைவெளியில், ஒவ்வொரு ஊர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, வழக்கம்போல், அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்.' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X