சேர்க்கைக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்: அரசு கல்லூரி முதல்வர் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:45

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அரசு கலைகல்லுாரியில் சேர, 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் (பொ) ராஜ்குமார் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரியில், (கல்லுாரி கோடு: 1021015) 2021 - 22ம் கல்வியாண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. ஆக., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tngasa.in அல்லது www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், பி.பி.ஏ., வணிக நிர்வாகம், பி.காம்., (சி.ஏ.,), பி.எஸ்.சி., கணிதம், பி.காம்., (பி.ஏ.,) பாடங்களுக்கு, தலா, 60 இடங்கள் வீதம், மொத்தம், 300 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்பட்டியல், ஜாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார், விளையாட்டு சான்று, மாற்றுத்திறனாளி, என்.சி.சி., சான்று மற்றும் பிற தகுதியுள்ள சான்றிதழ்களுடன் இணையதளத்தில் விண்ணப்பத்தை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கல்லுாரி கலந்தாய்வில் பங்கேற்கலாம். மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும்.விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் மின்னஞ்சல் முகவரி, மொபைல்போன் எண் அவசியம் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் சந்தேகத்துக்கு விளக்கும் வகையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கல்லுாரியில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.மேலும், சந்தேகம் இருந்தால் கல்லுாரியை, 04259 - 220335 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X