குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் பயணிகள் தவிப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் பயணிகள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
01:46

உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி உள்ளதால் பயணிகள் பாதிக்கின்றனர்.உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.4.30 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ரயில் பயணிகள், சுத்தமான குடிநீரை அருந்தி வந்தனர்.தற்போது, சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய துறை ரீதியான அதிகாரிகள் கவனம் செலுத்துவது கிடையாது.இதனால், பயணிகள், அருகில் உள்ள கடைகளில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை, 20 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர்.சுத்திகரிப்பு இயந்திரத்தின் பழுதை நீக்க வேண்டுமென பயணிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X