எம்.சி.ஓ.பி., வழக்குகளில் மோசடிக்கு... வச்சாச்சு 'செக்!' இழப்பீட்டுக்கு 'செக்' வழங்க உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 ஜூலை
2021
02:11
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2021 02:07

கோவை:விபத்து இழப்பீடு வழக்கில், காசோலை வழங்கும் பழைய நடைமுறையினை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.மோட்டார் வாகன விபத்தில் காயம்பட்டோர் அல்லது உயிரிழந்தவர்களுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் இழப்பீடு வழங்க கோரி, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள், செயல்பட்டு வருகின்றன.வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றம் விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட பிறகு,காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கான காசோலை வழங்கி வந்தனர்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த நடைமுறை மாற்றப்பட்டு நீதிமன்றம் வாயிலாக, பாதிக்கப்பட்டவர் அல்லது வாரிசுதாரர் வங்கி கணக்கில், நேரடியாக பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், சில மாவட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களின் கணக்கில் பணத்தை செலுத்தாமல், கோர்ட் ஊழியர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டதாக, புகார் அளிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் இது தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த ஐகோர்ட், எம்.சி.ஓ.பி., வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை, முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, அனைத்து மாவட்டத்திற்கும் நோடல் ஆபிசர் நியமிக்க உத்தரவிட்டது.


அதன்படி, 33 மாவட்டத்திற்கு, கூடுதல் நீதிபதியை கொண்ட நோடல் ஆபிசர்கள் நியமிக்கப்பட்டனர். கோவைக்கு, டான்பிட் கோர்ட் நீதிபதி ரவிக்கு, நோடல் ஆபிசராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கோர்ட் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க, இழப்பீடு வழங்கும் முறையில், பழைய நடைமுறையினை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, இனிமேல் பாதிக்கப்பட்டவர் வங்கி கணக்கில், கோர்ட் வாயிலாக பணத்தை செலுத்த வேண்டாம் என்றும், நீதிபதி, வக்கீல் முன்னிலையில், பாதிக்கப்பட்ட நபர் அல்லது வாரிசுதாரர்களிடம் பழைய முறைப்படி, காசோலையாக வழங்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'பழைய நடைமுறையே நல்லது'எம்.சி.ஓ.பி., வழக்கில் ஆஜராகும், கோவை வக்கீல் தீபக்குமார் கூறுகையில், ''விபத்தில் பாதித்தவர் அல்லது வாரிசுதாரரிடம், நேரடியாக காசோலை வழங்குவதால், முறைகேடு நடப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறையால் பிரச்னை வந்தது. பழைய நடைமுறையினை பின்பற்றுவது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian - Mumbai ,இந்தியா
27-ஜூலை-202108:52:21 IST Report Abuse
Subramanian This was there before this practice was stopped because the money never reached the beneficiary we are going back to the same corrupt சிஸ்டம். Instead of this the insurance companies should have been asked to do a direct transfer and an affidavit jointly signed by the beneficiary and the insurance companies should be filled in the court to close the case please don't go back to cheque tem to increase the corruption
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X