விபத்தில் மனைவியை இழந்தவருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு | சென்னை செய்திகள் | Dinamalar
விபத்தில் மனைவியை இழந்தவருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
02:15

சென்னை: விபத்தில் மனைவியை இழந்தவருக்கு, 19.32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


குன்றத்துாரைச் சேர்ந்தவர் ராணி, 41. தனியார் நிறுவன ஊழியர். இவர் மகன் செல்லதுரையுடன், 2018ம் ஆண்டு ஆகஸ்டில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். குன்றத்துாரிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கிச் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியதில் ராணி உயிரிழந்தார்.


மனைவி இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ராணியின் கணவர் தாமோதரன், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு இழப்பீடாக, 19.32 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X