பூங்காவில் இனி சுத்தமான காற்று! 'மாஸ் கிளீனிங்' செய்ய உத்தரவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பூங்காவில் இனி சுத்தமான காற்று! 'மாஸ் கிளீனிங்' செய்ய உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
02:21

கோவை:நாளொன்றுக்கு மண்டலத்துக்கு மூன்று வீதம், 15 பூங்காக்களை 'மாஸ் கிளீனிங்' முறையில் சுத்தம் செய்ய, சுகாதாரப் பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.கோவையில் வ.உ.சி., பூங்கா, காந்திபார்க், 10 பைசா பார்க் போன்றவை மக்கள் நெஞ்சம் நிறைந்தவை. இவை தவிர, செம்மொழி மாநாடு நினைவாக, ஏராளமான பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், பல லட்சம் ரூபாய் செலவழித்து சில பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.பூங்காக்கள் பலவும் போதிய பராமரிப்பின்றி காணப்பட்டன. மரக்கிளைகள் ஒடிந்து கிடந்தன. குவியல் குவியலாக சறுகுகள் காணப்பட்டன. பறவைகளின் எச்சங்கள் தென்பட்டன.ஆய்வுக்குச் சென்றபோது, அதை கவனித்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், நாளொன்றுக்கு, மண்டலத்துக்கு, 3 வீதம், மொத்தம், 15 பூங்காக்களை, 'மாஸ் கிளீனிங்' முறையில் சுத்தம் செய்ய, சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.கமிஷனர் மேலும் கூறுகையில், ''பூங்கா பராமரிக்கும் பணிக்கு டெண்டர் விடப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், வர்த்தக நிறுவனத்தினர் முன்வரலாம். அவர்களுடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும். காவலர்கள் நியமித்து, அடிக்கடி சுத்தமாக பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்காத வகையில், கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள், மாநகராட்சியை அணுகலாம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X