விட்டுக்கொடுத்த ஐந்தாயிரம் பேர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
02:21

கோவை:கோவை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் மற்றும் மளிகை தொகுப்பை, 5,670 பேர் பெறவில்லை. அவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று, வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் 1,401 ரேஷன்கடைகள் வாயிலாக, 10 லட்சத்து 64,860 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்பு ஆகியவை, 10 லட்சத்து 31,000 கார்டுதாரர்கள் மட்டுமே பெறத்தகுதியுடையவர்கள். அதற்கேற்ப நிதி மற்றும் மளிகை தொகுப்பு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் நேற்றைய நிலவரப்படி, 99.45 சதவீதம் பேருக்கு, அதாவது 10 லட்சத்து 25,330 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள .55 சதவீதம் பேருக்கு, 5,670 பேருக்கு வழங்கப்படவில்லை. யார் யார் பெறவில்லை என்ற விபரங்கள், கோவை மாவட்டத்திலுள்ள 11 தாலுகாவுக்குட்பட்ட ரேஷன்கடைகளிலிருந்து கணக்கெடுக்கப்பட்டது.அதில் கொரோனா காரணமாக இறந்து போனவர்கள், வயோதிகர்கள், பெரும்நிலக்கிழார்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பெரும்பணக்காரர்கள் மட்டும் இந்த நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு பெறவில்லை.வசதி படைத்தவர்கள், எப்படி அரிசி வாங்கும் கார்டுதாரர்களாக இருக்க முடியும் என்பதையும், வழங்கல் துறை கவனத்தில் கொண்டுள்ளது.அந்த ரேஷன் கார்டுகளை மட்டும், சிகப்பு கோடிட்டு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது குறித்து, வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'விருப்பமின்றி வாங்காமல் இருப்பவர்களை நாங்கள் என்ன செய்ய முடியும். அப்படியும் சில கார்டுதாரர்கள் எங்களுக்கு ஒதுக்கியதை யாருக்கும் கொடுக்கக்கூடாது. கணக்கிலும் வரக்கூடாது என்று எச்சரித்து சென்றிருக்கின்றனர். அதனால் வாங்காதவர்களை வற்புறுத்தவில்லை. இரட்டிப்பாக கேட்பவர்களுக்கும் வழங்கவில்லை. மீதமிருப்பதை அப்படியே அரசிடம் ஒப்படைத்து விடுவோம். வரும் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X