வெளி மாவட்டங்களில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள்: திருப்பூர் பின்னலாடை துறைக்கு பலம் சேர்க்க புதிய முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
02:52

திருப்பூர்;மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில், திருப்பூருக்காக ஆடை தயாரித்து தரும் ஜாப்ஒர்க் நிறுவனங்களை ஏற்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் தொழிலாளர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. இதனால், திட்டமிட்டபடி குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியாமலும், உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளை நிறுவனங்கள் சந்தித்துவருகின்றன.திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவளை அமைப்பு இணைந்து, தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தி, பின்னலாடை துறையில் பணிபுரிய உகந்த தொழிலாளர் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்துள்ளன.உள்ளூர் முதலீட்டாளர்களைக்கொண்டு, தேர்வுசெய்யப்பட்ட பகுதிகளில் ஜாப்ஒர்க் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது துவங்கியுள்ளன. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலா மூன்று இடங்கள்; தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் தலா இரண்டு என, நான்கு மாவட்டங்களில், முதல் கட்டமாக பத்து இடங்களில், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.பொதிகை மனிதவள அமைப்பு இயக்குனர் சுந்தரேசன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை துறைக்கு தேவையான தொழிலாளர்கள், தமிழகத்திலேயே உள்ளனர். பல்வேறு காரணங்களால் இடம்பெயர விரும்பாமை; இயலாமைகளால், பெரும்பாலானோர் திருப்பூர் நோக்கி வருவதில்லை. அதேநேரம், தங்கள் பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனம் அமைந்தால், இணைந்து பணிபுரிய, தொழிலாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆடை தைத்துக்கொடுக்க அதிகளவில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே நடத்திய கள ஆய்வு அடிப்படையில், திருப்பூருக்காக ஆடை தயாரித்து தரும் ஜாப்ஒர்க் நிறுவனங்களை, தொழிலாளர் மிகுந்த, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏற்படுத்த உள்ளோம்.முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில், பத்து இடங்களில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, அந்தந்த பகுதி முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட முதலீட்டாளர்கள், திருப்பூருக்கு நேரடியாகவந்து, தங்களுக்கு ஆர்டர் வழங்க உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.விரைவில், வெளிமாவட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் படிப்படியாக இயக்கத்தை துவங்கும். வரும்நாட்களில், இந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை பயிற்சி மையமாகவும் செயல்படச் செய்து, தொழிலாளருக்கு பயிற்சி அளித்து, திருப்பூருக்கு அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X