உற்பத்தி நிறுத்த தொடர் போராட்டம்: பவர்டேபிள் நிறுவனங்கள் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
02:58

திருப்பூர்:கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, பவர்டேபிள் நிறுவனங்கள், காலவரையற்ற ஆடை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நாளை முதல் துவக்குகின்றன.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில், பவர்டேபிள் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 2016ல் ஏற்படுத்தப்பட்ட கட்டண உயர்வு ஒப்பந்தம், கடந்த 2020 அக்., 30ல் முடிந்தது. உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, கொரோனா அலை ஓய்ந்துள்ளதையடுத்து, கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என, பவர்டேபிள் உரிமையாளர் சங்கம், 'சைமா'வுக்கு கடிதம் அனுப்பியது.தற்போதைய தொழில் நெருக்கடிகளை குறிப்பிட்டும், பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சு முடிந்த பின், துவக்கலாம் என, சைமா சங்கம் பதிலளித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத பவர்டேபிள் உரிமையாளர் சங்கம், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.இதற்காக செயற்குழு கூட்டம், லட்சுமிநகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கர், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் நந்தகோபால், 'சைமா' சங்கம் அளித்துள்ள, பதில் கடிதம் குறித்து பேசினார்.உற்பத்தி செலவினங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. பழைய ஒப்பந்த காலம் முடிந்து ஒன்பது மாதமாகிவிட்டது; இனியும் தாமதித்தால், பவர்டேபிள் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். தொழில் சூழல்களை உணர்ந்த, சிறு, குறு உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பவர்டேபிள் கட்டணத்தை உயர்த்தி வழங்கி வருகின்றன.பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களோ, ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என்கின்றன.'சைமா' சங்கம், பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தி, வரும் 28ம் தேதி முதல், காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது, பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, ஆர்டர் பெறுவது, ஆடை தயாரிப்பது நிறுத்தப்படும். இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X