புதிய தொகுப்பு வீடுகள் எதிர்பார்பில் பழங்குடியினர் | நீலகிரி செய்திகள் | Dinamalar
புதிய தொகுப்பு வீடுகள் எதிர்பார்பில் பழங்குடியினர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
03:06

கூடலுார்;'கூடலுார், கோழிகொல்லி கிராமத்தில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் புளியாம்யாறை அருகே, உள்ள கோழிகொல்லி பழங்குடி கிராமத்தில் நான்கு இடங்களில், 78 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில், சமுதாய கூடம் அருகே, ஆறு பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த, 2005--06 நிதியாண்டில் மலை பகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம், நெல்லியாளம் நகராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. பழமையான இந்த வீடுகள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளன.பழங்குடியினர் கூறுகையில்,'அரசு, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்த ஆபத்தான நிலையில் உள்ளது. வேறு வசதி இல்லாததால் அந்த வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகிறோம். மழை கால பாதிப்புகள் ஏற்படும் முன், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X