மூத்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
03:17

சென்னை:தமிழக அரசின் திரு.வி.க., விருது பெற்ற மூத்த தமிழறிஞர் இளங்குமரனார், 94; வயது மூப்பின் காரணமாக, நேற்று, காலமானார்.திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரத்தில், 1927, ஜன., 30ல், ராமு, வாழவந்த அம்மை தம்பதியின் மகன் இளங்குமரனார்.புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியராக பணிபுரிந்த இவர், குண்டலகேசியின் நிறைவுப்பகுதி, திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு, தொல்காப்பியர், பாவணர், பாரதிதாசன் ஆகியோரின் முழுப்படைப்புகள், சங்க இலக்கியங்களையும் தொகுத்தவர்.தமிழ் ஆய்வு உள்ளிட்ட, 550க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர். 4,800க்கும் மேற்பட்ட தமிழ் முறை திருமணங்களை நடத்தி வைத்தவர்.இவர் சேகரித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுால்களை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு நன்கொடையாக வழங்கினார். இவரின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகள், பல்கலைகள் உள்ளிட்டவை ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் வழங்கி கவுரவித்துள்ளன.தமிழறிஞர் இளங்குமரனாருக்கு, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் பேத்தி முத்தரசி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுகிறார்.மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்த இளங்குமரனாருக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவ்வை நடராசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.திருநகர் மயானத்தில் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X