எம்.பி.,க்கள் எண்ணிக்கை 1,௦௦௦ ஆகிறதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
03:18

சூழ்ச்சி என்கிறது காங்., - புரளி என்கிறது பா.ஜ.,

- நமது நிருபர் --

'லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை தற்போது, 543 ஆக உள்ளது. அதை, 1,000 ஆக உயர்த்தும் முயற்சியில், ஆளும் பா.ஜ., அரசு தீவிரமாக உள்ளது' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி எம்.பி., கூறியுள்ளார்.'கடந்த, 2001ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் தொடர்ந்து மீறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே, பார்லி.,யின் இரு சபைகளிலும் இருக்கும், எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதில், பெண்களுக்கான உரிய பங்கு அளிக்கப்படும் என கூறப்பட்டாலும், இந்த முயற்சி, பார்லி.,க்கு என இருக்கும் சிறப்பு தன்மையில், ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்' என, மணீஷ் திவாரி, தன் கருத்தாக பதிவு செய்துள்ளார்.'இப்படி செய்தால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம், பார்லிமென்டில் குறையும் ஆபத்து இருக்கிறது' என, தமிழக காங்., - -எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து, கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டி:கொரோனா கால கட்டத்தில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சூழலில் தான், பல ஆயிரம் கோடிகளை கொட்டி, 'விஸ்டா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் தான், பார்லிமென்ட் கட்டடமும் கட்டப்பட உள்ளது.ஆயிரம் எம்.பி.,க்கள் பங்கேற்கும் அளவுக்கு, பிரமாண்ட பார்லிமென்ட் கட்டடம் கட்ட திட்டமிட்டு உள்ளனர். அதாவது, பார்லிமென்டின் இரு சபைகளிலும், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசு முடிவெடுத்து விட்டது. அதை நோக்கியே, பா.ஜ., அரசு பயணிக்கிறது.மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை உயர்த்தும், மத்திய அரசின் முடிவு ஆபத்தானது. வட மாநிலங்களில் மக்கள்தொகை ஏற்கனவே அதிகம். ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்து, ஹிந்துத்துவாவை வைத்து அரசியல் செய்து, ஹிந்துக்கள் மத்தியில், பா.ஜ., செல்வாக்குடன் உள்ளது.அதோடு, அங்கு மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்கவில்லை; அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, வட மாநிலங்களுக்கு கூடுதல் எம்.பி.,க்கள் கிடைப்பர். அதை வைத்து, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் கூடுதலாக, 50 எம்.பி.,க்கள் மட்டுமே கிடைப்பர். அதேநேரம், வட மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கை, 400ஐ தாண்டி விடும். இதனால், ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து, தென் மாநில கட்சிகள் உணர வேண்டும்; எதிராக குரல் எழுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'2035ல் தான் அதிகரிக்க முடியும்'இந்திய அரசியல் சட்டம் பிரிவு, 81 உட்பிரிவு, 3ன் படி, லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 550க்கு மிகாமல் இருக்க வேண்டும் என, தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின், 7வது திருத்தம் வாயிலாக எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 500 ஆக இருந்ததை, 530 ஆக்கினர். பின், 31வது திருத்தத்தில், 550 ஆக்கினர்.ஆனால், 550 வரை செல்லாமல், 543 என்ற எண்ணிக்கையில் நின்று விட்டனர். அதன்பின், சட்ட திருத்தம், 42ன் படி, 1976ல், அப்போதைய பிரதமர் இந்திரா, எண்ணிக்கையை அதிகரிக்க தேவையில்லை எனக்கூறி, 543ல் முடக்கினார்.பின், 2003ல் பிரதமராக இருந்த வாஜ்பாய், 87வது திருத்தம் கொண்டு வந்து, எம்.பி.,க்கள் எண்ணிக்கையை கூட்டாமல், எல்லை வகுத்து மறுசீரமைப்பு மட்டும் செய்ய வழி செய்தார். இந்த திருத்தத்தின்படி, 2031ல் தான், இனி லோக்சபா தொகுதிகளுக்கு மறுவரையரையே செய்ய முடியும். அதன்பின், 2035ல் தான், தேவையானால் எம்.பி.,க்கள்எண்ணிக்கையை கூட்ட முடியும்.இது தான் சட்ட ரீதியிலான நிலை. இப்படி இருக்கும்போது, பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ எம்.பி.,க்கள் எண்ணிக்கை தொடர்பாக எதுவும் சொல்லாத நிலையில், காங்கிரசின் மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர், இது குறித்து எப்படி கருத்து சொல்கின்றனர் என புரியவில்லை.- எஸ்.ஆர்.சேகர், பொருளாளர், தமிழக பா.ஜ.,மாற்று வழியை யோசிக்க வேண்டும்!மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தை, ஒழுங்காக பின்பற்றிய மாநிலங்களுக்கு, பார்லிமென்டில் உறுப்பினர் எண்ணிக்கை குறையுமானால், அது, தண்டனை தான். எனவே, மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது.- - வைகைச்செல்வன், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர்தி.மு.க., தலைமை முடிவு எடுக்கும்!மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வது, ஏற்கத்தக்கது அல்ல. இப்போது இருக்கும் நிலையையே தொடரலாம். மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்து, அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் நிலை வந்தால், கட்சி தலைமை இது குறித்து தன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.- சண்முகம், ராஜ்யசபா எம்.பி., - தி.மு.க.,

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X