போலீஸ், தீயணைப்பு வீரர்களுக்கு கோவையில் உடற்தகுதி தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
03:27

கோவை:போலீஸ், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில், 372 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி, திறனறித் தேர்வுகள் நேற்று துவங்கின; ஆக., 6 வரை நடக்க உள்ளது.கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம், ஆயுதப்படை மைதானத்தில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுகள் நடந்தன.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற, 500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டது. 372 பேர் தேர்வில் பங்கேற்றனர். 128 பேர் தேர்வுக்கு வரவில்லை. சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டம், உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.இன்று நடக்க உள்ள தேர்வில், 500 பேர் பங்கேற்க உள்ளனர். தகுந்த காரணத்தை தெரிவிக்கும்பட்சத்தில் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.உற்சாகப்படுத்திய போலீசார்நேற்று நடந்த தகுதித் தேர்வில், ஓட்டப்போட்டிகள் நடந்தன. இதில், எட்டு நிமிடத்தில் இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் ஏழரை நிமிடங்கள் ஓடிய பின், சோர்வடைந்தார். அவர் இலக்கு அருகில் வந்தபோது சோர்வடைந்து ஓடுவதை நிறுத்தினார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவரை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து இலக்கை அடைய வைத்தனர். போலீசார் கொடுத்த உற்சாகத்தால், இளைஞரும், இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் கடந்தார். இது தேர்வுக்கு வந்திருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X