விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் | கடலூர் செய்திகள் | Dinamalar
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:34

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.



முன்னதாக ஆலை தலைமை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் சர்க்கரைத்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங், கூடுதல் ஆணையர் அன்பழகன், கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர்கள் பவன்குமார் ஜி கிரியப்பவனர், ரஞ்சித்குமார்சிங் முன்னிலை வகித்தனர்.வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலை அதிகாரிகள், தொழில்நுட்பு வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்து வளர்ச்சிக்கான பணிகள் குறித்த கேட்டறிந்தார்.



பின், அவர் பேசியதாவது:கடந்த இரண்டு பருவங்களில் ஆலை அரவை திறன் இயந்திரக் கோளாறு காரணமாக ஓட்டம் பாதித்து, சர்க்கரை கட்டுமானம் வெகுவாக குறைந்துள்ளது. கட்டுமானத்தை உயர்த்த பராமரிப்பு பணிகள் செய்து இயந்திரக் கோளாறுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும், ரூ. 84 கோடி மதிப்பில் கடந்த 2010 ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்த 15 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.



கிடப்பில் போன மின் உற்பத்தி திட்டத்தை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை வளர்ச்சிக்காகவும் கரும்பு உற்பத்தியை பெருக்கி, ஆலையின் நலம் பாதுகாக்கப்படும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி வேளாண் துறையில் விவசாயிகளுக்கு நிதியாண்டில் தனி பட்ஜெட் போடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



விவசாய முன்னேற்ற சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் தங்கஆனந்தன், பாட்டாளி கரும்பு விவசாய சங்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர், விவசாய சங்க நிர்வாகிகள், வெங்கடேசன், சிட்டிபாபு, வீரசோழன், வேல்முருகன், தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X