குறிஞ்சிப்பாடி தொகுதி: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
குறிஞ்சிப்பாடி தொகுதி: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:35

வடலுார் : குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசைக் கண்டித்து 28ம் தேதி அ.தி.மு.க., நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது.



குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷியம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆனந்த் பாஸ்கர் முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் சூரியமூர்த்தி வரவேற்றார். கடலுார் மத்திய மாவட்ட செயலாளர் சம்பத், மாநில அமைப்பு செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசினர். மாவட்ட பேரவை காமராஜ், நிர்வாகிகள் காசிநாதன், சேவல் குமார், சுப்பிரமணியின், ராதா, தட்சிணாமூர்த்தி, தணிகைவேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X