வாக்குறுதி நிறைவேற்றாமல் தி.மு.க., நாடகம் | கடலூர் செய்திகள் | Dinamalar
வாக்குறுதி நிறைவேற்றாமல் தி.மு.க., நாடகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:37

கடலுார் : தி.மு.க., அரசை கண்டித்து, நாளை (28 ம் தேதி) அ.தி.மு.க., சார்பில் கட்சியினர் வீடு முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கடலுார் மத்திய மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் கட்சி அலுவலக்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாஜி., அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மீனவர் பிரிவு தங்கமணி, ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர்., மன்ற சேவல் குமார், விவசாயப் பிரிவு செயலாளர் காசிநாதன், கடலுார் ஒன்றிய சேர்மன் பக்கிரி முன்னிலை வகித்தனர்.கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதாவது:தி.மு.க., அரசை எதிர்த்து மக்களின் மனக்குமுறலை வெளிக்கொண்டு வரும் போராட்டமாக அ.தி.மு.க., நடத்தும் போராட்டம் அமைய வேண்டும். ஆளும் தி.மு.க., அரசு விடியல் தரப் போவதாக சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி இப்போது ஏமாற்றுகிறது.ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம், மேகதாது அணை விஷயத்தில் இரட்டை வேடம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து விடுவோம் என்றார்கள். மகளிருக்கு ரூ. 1000 வழங்குவோம், காஸ் விலை ரூ. 100 மானியம் வழங்குவோம் என அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க., அரசு மக்களிடம் நாடகம் நடத்துகிறது. இதை கண்டித்து கடலுார் தொகுதியில் அனைத்து வார்டுகள், ஊராட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி விடியல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இலக்கிய பிரிவு ஏழுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு வெங்கட்ராமன், மகளிரணி கம்சலா, நகர துணை செயலாளர் கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X